நீட் தேர்வு முறைகேடு : மஹாராஷ்டிராவில் 2 ஆசிரியர்கள் கைது..!! - Seithipunal
Seithipunal


மருத்துவ இளங்கலைப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 2 ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். இதனிடையே ஏற்கனவே இந்த நீட் முறைகேடு சம்பவம் தொடர்பாக உ.பி , பீகார், ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக மருத்துவ இளங்கலை படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5ம் தேதி நாடு முழுவதும் நடை பெற்றது. அதில் லட்சக் கணக்கான மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் குறிப்பிட்ட 1563 மாணவர்களுக்கு மட்டும் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்களை வழங்கியதாக ஒத்துக் கொண்டுள்ளது.

இதையடுத்து மாணவர்கள் தரப்பில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானதாகவும், குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கியதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை மீது வழக்கு தொடரப் பட்டுள்ளது.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் உ. பி, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நீட் வினாத்தாள் விற்பனை செய்ததாக கூறி இதுவரை 21 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். தற்போது மஹாராஷ்டிராவில் நீட் முறைகேடு தொடர்பாக 2 ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே மத்திய அரசு இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் நீட் முறைகேடு குறித்து விசாரிக்க 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவையும் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Teachers Arrested in Maharashtra In NEET Malpractice


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->