கர்நாடகாவில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி.! 2 வாலிபர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மங்களூர் போலீசார் நேற்று முன்தினம் நந்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த ஸ்கூட்டரை நிறுத்தி, அதில் வந்த இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் ஸ்கூட்டரில் சோதனை செய்ததில், 500 ரூபாய் நோட்டுகள் ஒரு பையில் கத்தை கத்தியாக இருந்தது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் பிசிரோடு பகுதியைச் சேர்ந்த நிஜாமுதீன்(32) மற்றும் செப்பு பகுதியை சேர்ந்த ரஜீம்(31) என்பதும், இவர்கள் இரண்டு பேரும் அழிவு ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றதும் தெரிய வந்தது.

மேலும் இவர்கள் கோவையில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் ஒருவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கள்ள நோட்டுகள் வாங்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்த கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

இதையடுத்து கோவை போலீசாரிடம் ஆலோசனை நடத்தி இதன் பின்னணியில் இருப்பவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 young man arrested for trying to circulate fake 500 rupee notes in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->