3 லட்சம் கோடியை பதுக்கி வைத்திருக்கும் பெரும் முதலைகள்! ரூ.2,000 நோட்டுக்களை திரும்பப்பெறுவது நடவடிக்கை!  - Seithipunal
Seithipunal


ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுக்களை திரும்பப்பெறுவது சரியான ஒரு நடவடிக்கை தான் என்று, முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், வரி ஏய்ப்பு தொடர்பான வருமான வரி, அமலாக்கத்துறை சோதனைகளில் அதிகப்படியான ரூ.2,000 நோட்டுக்களே பிடிபட்டுள்ளது.

20 சதவீதம் பேர் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பவர்கள். 

எனவே, இந்த ரூ.2,000 நோட்டுகள் செல்லாது/திரும்ப பெரும் நடவடிக்கை காரணமாக சாமானிய மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை.

மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்திருப்பதன் காரணமாக நேரடிப் பண பரிவர்த்தனைகள் குறைந்துள்ளது.

வரும் 2026-ம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பண பரிமாற்றம் மூன்று மடங்கு அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 rupee note issue some info 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->