வங்கியில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு ஏற்பாடு.. வங்கி அதிகாரிகள் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் வரும் மே 23 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

தினமும் 20,000 ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றலாம். வங்கிகளில் செலுத்தப்படும் ரூ.2000 நோட்டுக்களை வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கி கணக்கில் செலுத்துவதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

மேலும், எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் என்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து பிற நோட்டுகளை மாற்ற மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 10 நோட்டுகள் வீதம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே 2000 நோட்டுகளை கொடுத்து பிற நோட்டுகள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து நேற்று முதலே பொதுமக்கள் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் வரும் 23ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை திங்கட்கிழமை வங்கி கிளைகள் அனைத்தும் செயல்படும் அப்போது வங்கி ஊழியர்களிடம் ஆலோசித்து 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஆலோசனை நடத்த உள்ளோம். 

அந்த வகையில் வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு கவுண்டர்கள் உருவாக்கப்படும். அதேபோல் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வங்கிகளுக்கு வரும் வகையில் வரிசையில் நிற்க ஏற்பாடு செய்யப்படும்.

 மேலும் கூட்டம் அதிகமாக இருந்தால் பொதுமக்களை வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் பந்தல் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் வயதானவர்கள் எளிதாக பணத்தை மாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 rupees notes change in banks special counters


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->