2024 நாடாளுமன்ற தேர்தல்.. காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி.. மம்தா - அகிலேஷ் யாதவ் முடிவு.! - Seithipunal
Seithipunal


வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. அதன்படி எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என முக்கிய தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டுவதில் இழுபறி நீடிக்கிறது. அந்த வகையில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைக்க முக்கிய கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்வும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து மம்தா பானர்ஜி அடுத்த வாரம் ஒடிசா முதலமைச்சரும், பிஜூ ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக் சந்திக்க உள்ளார். அதன்படி இவர்கள் மூவரும் சேர்ந்து காங்கிரஸ் அல்லாத கூட்டணி உருவாக்க முடிவு செய்ததாக தகவல் வழியாக உள்ளது. 

மேலும் வரும் நாட்களில் மற்ற மாநில கட்சிகளையும் சந்தித்து இணைக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அல்லாத கூட்டணியாக விரும்புவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2024 Parliament Election Mamata - Akhilesh Yadav


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->