21 மணி நேரம் விமான சேவை நிறுத்தம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ரீமால் புயல், வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. அதன் பின்னர், நாளை காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்.

இந்த புயல் வங்காளதேசம் மற்றும் சாகர் தீவு, கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ரீமால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நண்பகல் முதல் 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.

அதாவது, நாளை மதியம் 12 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை மொத்தம் 21 மணி நேரம் விமானச் சேவை நிறுத்தப்படுகிறது. கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 hours flight service stop for remal cyclone effect


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->