கொட்டி தீர்த்த கனமழை! மின்னல் தாக்கி 21 பேர் பலி! - Seithipunal
Seithipunal


பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் கடந்த சில வாரங்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில் மின்னல்தாக்கி அவ்வப்போது பெரும் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

அதேபோல் நேற்று முன்தினம் பீகார் மாநிலத்தில் பரவலாக இடி முன்னலுடைய கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதிலும் பல இடங்களில் மின்னல் தாக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

இது நேற்று மாலை வரையிலான முந்தைய 24 மணி நேர இடங்களில் மின்னல் தாக்கி இதுவரை 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மதுபானி மாவட்டத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். இதே போல் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 21 மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது

உயிரிழந்துள்ள குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 4 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 21 பேரையும் சேர்த்து இந்த மாதத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 70 நெருங்குவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 people were killed by lightning in a single day due to heavy rains in Bihar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->