மது இல்லாமல் திருமணம் நடத்தினால் ரூ.21 ஆயிரம் பரிசு - எங்குத் தெரியுமா?
21000 money price to no liquor in marriage function
தற்போதைய காலத்தில், திருமண நிகழ்ச்சி என்றாலும், துக்க நிகழ்ச்சி என்றாலும் மது இல்லாமல் இருப்பதில்லை. அதுவும் திருமண வீடுகளில் மதுவிருந்து, டி.ஜே. இசை நடன நிகழ்ச்சி முக்கிய இடத்தை வகிக்கிறது. பெரிய நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமங்கள் வரை இந்த கலாச்சாரம் வந்துவிட்டது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா மாவட்டம் பல்லோ கிராம ஊராட்சியில் மது விருந்து கலாச்சாரத்தை கட்டுப்படுத்த புதிய உத்தியை கையில் எடுத்து, வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி தலைவர் தெரிவித்ததாவது:-
"திருமண நிகழ்ச்சிகளில் வீண் செலவுகளில் ஈடுபட வேண்டாம். மது அருந்துவதைத் தடுக்க இந்த முயற்சியை நாங்கள் எடுத்துள்ளோம். திருமணம் நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாறப்படுவதாலும், டி.ஜே. நிகழ்ச்சிகளாலும் அதிக அளவில் சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது.
இதனால் பகை ஏற்படுவதுடன், அதிக ஒலி காரணமாக மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. ஆகவே திருமண நிகழ்ச்சிகளில் மதுபான விருந்து இல்லாமல், டிஜே இசையை இசைக்காமல் இருந்தால் அந்த திருமண வீட்டாருக்கு ரூ. 21 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை அறிவிப்பாகவும் வெளிட்டுள்ளோம்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
21000 money price to no liquor in marriage function