மகாராஷ்டிரா || வெடித்து சிதறிய இரும்பு பாய்லர் - 22 தொழிலாளர்கள் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதால் 22 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா பகுதியில் இரும்பு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இந்தத் தொழிற்சாலையில், இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால், உருகிய இரும்புக் குழம்பு தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளது. இதனால், 22 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 employees injured steel boiler blast in maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->