நக்சலைட்டுக்கள் சுட்டுக் கொலை - சத்தீஸ்கரில் பயங்கரம்..!
22 naxalites encounter in chateesgarh
நாட்டில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கர் உள்ளது. இந்த மாநிலத்தின் சில் பகுதிகளில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால் இங்கு சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது பாதுகாப்பு படையினருக்கும். நக்சலைட்டுளுக்கும் இடையே என்கவுண்டர்களும் நடைபெறுகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பிஜாப்பூர் மற்றும் தாண்டேவாடா பகுதியின் எல்லைபகுதியில் இன்று காலை ஏழு மணியளவில் ஒரு காட்டு பகுதியில் நக்சலைட்டுளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்க்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் 22 நக்சலைட்டுக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இந்த சண்டையில் மாவட்ட ரிசரவ் கவலைப்படை ஜவான் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
22 naxalites encounter in chateesgarh