ஐடி ரெய்டில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி - பணம் என்னும் பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் உள்ள மதுபான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் கடந்த புதன்கிழமை வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனையில், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி. தீரஜ் பிரசாத் சாகுவுக்கு சொந்தமான இடமும் அடங்கும். இந்த இடத்தில் நடைபெற்ற சோதனையில் நேற்று முன்தினம் வரை ரூ.250 கோடி கருப்பு பணம் கட்டுக்கட்டாக பிடிபட்டது.

இந்த நிலையில் நேற்றும் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத பெருந்தொகை கைப்பற்றப்பட்ட நிலையில், பிடிபட்ட மொத்த தொகையின் மதிப்பு ரூ.290 கோடியை நெருங்கியது. நாட்டிலேயே ஒரு சோதனையில் பிடிபட்ட மிக அதிகமான தொகையாக இந்த ரூ.290 கோடி கருதப்படுகிறது. 

இது தொடர்பாக சில மதுபான நிறுவன அதிகாரிகளின் வாக்குமூலத்தை வருமான வரித்துறையினர் நேற்று பதிவு செய்தனர். மேலும், குறிப்பிட்ட மதுபான நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் சோதனை தொடரும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

290 crores money seized in jarkhant congrass mp house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->