கொச்சி விமான நிலையத்தில் 3 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு விமானங்கள் வருகின்றனர். அப்படி வரக்கூடிய விமானங்களில் பயணிகள் சிலர் சட்டவிரோத பொருட்களை கடத்திக் கொண்டு வரும் சம்பவங்கள் அரங்கேறுகிறது.

அதனை தடுக்கும் விதமாக சுங்கத்துறையினர் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் உடமைகளை தீவிரமாக சோதனை செய்வது வழக்கம். இந்த நிலையில் பாங்காங்கில் இருந்து கொச்சி வந்த விமானத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் படி கொச்சி விமான நிலையத்திற்கு பாங்காங்கில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்து வந்த விமானிகள் மற்றும் அவர்களது உடமைக்கல் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. அப்போது மலப்புரத்தை சேர்ந்த உஸ்மான் என்பவர் தனது டிராலி பேக்கினுள் தின்பண்டங்களுக்கு மத்தியில் கலப்பின கஞ்சாவை மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 13 கிலோ எடையுள்ள அந்த கலப்பின கஞ்சா இரண்டு பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.3 கோடியே 50 லட்சம் ஆகும். இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபர் கஞ்சாவை தாய்லாந்தில் இருந்து கடத்தி கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத் துறையினர் உஸ்மானை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 crores worthable drugs seized in kochi airport


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->