மனித மூளைக்குள் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்! மறதி நோய்க்கு வாய்ப்பு - சுப்ரியா சாஹு சொல்லும் அதிர்ச்சி செய்தி!
Micro Plastic in Human Brain
நுண் நெகிழிகள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு இருப்பது குறித்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு விழிப்புணர்வு செய்தியாக மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
அதில், மனிதனின் மூளைக்குள்ளும் ஊடுருவியிருக்கிறது நுண் நெகிழிகள். சா்வதேச ஆய்வு முடிவுகளில் அதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மறதி நோய் பாதிப்பு: டிமென்சியா எனப்படும் மறதி நோய்க்கும் இந்த நுண் நெகிழிக்கும் இடையேயான தொடா்பை அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. உணவு, நீா், காற்று என நமது அன்றாட வாழ்வின் அனைத்திலும் நுண் நெகிழிகள் நிறைந்துள்ளன.
நெகிழி என்பது புறச்சூழலுக்கான அச்சுறுத்தல் என்று மட்டும் இனி கருத முடியாது. மாறாக அது மக்களின் ஆரோக்கியத்தின் மீதான அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ளார்.
ஆய்வு அறிக்கை: கடந்த 1997-லிருந்து 2024 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தான் அது.
இந்த ஆய்வில் 12-க்கும் மேற்பட்டோரது உடற்கூறாய்வில் மூளையின் நுண்நெகிழி துகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சிறுநீரகம், கல்லீர, ரத்தம், விந்தணு, தொப்புள் கொடி, தாய்ப் பால் ஆகியவற்றிலும் நுண்நெகிழி துகள் கண்டறியப்பட்டுள்ளது.
English Summary
Micro Plastic in Human Brain