இறுதி சடங்கு ஊர்வலத்தின் போது பரிதாபம்..! மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உறவினரின் இறுதி சடங்கு ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். 

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராணியம்மா (68). இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து இவரது இறுதி சடங்குகள் நேற்று நடைபெற்றது. அப்பொழுது ராணியம்மாவின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து ராணியம்மாவின் உடல் பல்லக்கில் வைத்து சுடுகாடு அருகே கொண்டு சென்ற போது, எதிர்பாராத விதமாக பல்லக்கு மின்கம்பிகள் மீது உரசியுள்ளது.

இதனால் மின் கம்பிகள் அருந்து பல்லக்கில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடன்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்தவர்கள் முனப்பா (45), ரவீந்திரன் (37), திருப்பதி (52) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 died due to electrocution during the last rites of a relative in Andhra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->