புனேவில் சோகம் - நீர் வீழ்ச்சியில் மூழ்கி 13 வயது சிறுமி உட்பட இருவர் பலி..! மேலும் 3 பேர் மாயம்..!!
3 Missed and 2 Peoples Drowned And Died in WaterFall in Pune including 13 Year Old Girl
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ளது லோனாவாலா. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதி ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது. மலை வாசஸ்தலமான லோனாவாலா புனேவில் இருந்து 64 கி. மீ அதாவது சுமார் 40 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
மேலும் சிக்கி என்ற கடலை மிட்டாய் தயாரிப்பிற்கு மிகவும் புகழ்பெற்ற இடமாகவும் இந்த லோனாவாலா உள்ளது. மேலும் இந்திய கடற் படையின் முதன்மை தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமான ஐ என் எஸ் சிவாஜி பயிற்சி மையம் லோனாவாலாவில் தான் அமைந்துள்ளது. இங்கு தான் கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது.
இந்த லோனாவாலா பகுதியில் புஷி என்று ஒரு அணை உள்ளது. இந்த அணையின் அருகில் ஒரு நீர் வீழ்ச்சியும் அமைந்துள்ளது. பலரும் இந்த நீர் வீழ்ச்சிக்கு குடும்பமாக வந்து குளித்து விட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று லோனாவாலாவில் உள்ள அந்த குறிப்பிட்ட நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது ஒரு 13 வயது சிறுமியும் மற்றும் ஒரு பெண்ணும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் இரண்டு சிறுமிகளும், ஒரு சிறுவனும் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் அனைவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் உயிரிழந்தவர்களை மீட்டதோடு, மாயமானவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
3 Missed and 2 Peoples Drowned And Died in WaterFall in Pune including 13 Year Old Girl