மீண்டும் பதற்றம் - வங்காளதேசத்தில் வன்முறையில் சிக்கி 32 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


வங்காளதேசத்தில் போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சியினரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சிக்கி இதுவரைக்கும் 32 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 

பாகிஸ்தான் நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்ததுடன், போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில், வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி பல ஆயிரம் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

இதனால், அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையை அடுத்து, இன்று மாலை 6 மணி முதல் வங்காளதேசத்தில் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

32 peoples died in bangaladesh for voilence


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->