35 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்கள் முடக்கம்- மத்திய அரசு.!
35 YouTube channel banned central govt
முன்னதாக பாகிஸ்தானிலிருந்து இந்திய நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்பட்ட இரண்டு இணையதளங்கள் மற்றும் 19 யூடியூப் சேனல்கள் மத்திய அரசால் முடக்கப்பட்டது.
இத்தகைய நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது, "ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து இயங்கிய 20 இணையதள கணக்குகள் அடையாளம் காணப்பட்டு முடக்கப்பட்டது.
பல யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் இந்திய அரசுக்கு எதிரான பொய்யான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் நாட்டில் ஒற்றுமை கேள்விக்குறியாகிறது." என்று தெரிவித்திருந்தார்.
இத்தகைய நிலையில் தற்போது மத்திய அரசு இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட 35 யூடியூப் சேனல்கள் முடக்கியுள்ளது. மேலும், இரண்டு ட்விட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் இரண்டு இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.
English Summary
35 YouTube channel banned central govt