அதிக சத்தத்துடன் பாடல்... லாட்ஜ் மாடியில் இருந்து தள்ளி காவலாளி கொலை.! சினிமா நடன கலைஞர்களின் வெறிச்செயல் - Seithipunal
Seithipunal


லாட்ஜ் மாடியில் இருந்து காவலாளியை கீழே தள்ளி கொலை செய்த சென்னையை சேர்ந்த சினிமா நடன கலைஞர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த சினிமா நடன கலைஞர்களான மணி, பீமா, நரேஷ் மற்றும் நாகராஜ் ஆகிய நான்கு பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சென்றனர். இந்நிலையில் லாட்ஜில் தங்கி இருந்த 4 பேரும், இரவு மொட்டை மாடியில் செல்போனில் சத்தமாக பாடல் வைத்துவிட்டு மது குடித்தபடி நடனமாடியுள்ளனர்.

இதனால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டதால் காவலாளி, அவர்களை கண்டித்துள்ளார். அப்பொழுது இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நான்கு பேரும் காவலாளியை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த காவலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த காவலாளியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 Chennai cinema dancers arrested after being pushed down from the lodge floor and killed by a security guard in Hyderabad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->