ராஜஸ்தான் : திருமண நிகழ்ச்சியின் போது சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து - 4 பேர் பலி, 60 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ஜோத்பூரில் திருமண நிகழ்ச்சியின் போது எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 60 பேர் காயமடைந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள புங்ரா கிராமத்தில் நேற்று திருமண நிகழ்ச்சியின் போது திடீரென எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 60 திருமண விருந்தினர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் புங்ராவில் இருந்து மணமகன் ஊர்வலம் தொடங்குவதற்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும், காயமடைந்த 60 பேரில் 42 பேர் எம்ஜிஹெச் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர் என்றுமாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தாவி தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்காக உணவு தயார் செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்களில் ஏற்பட்ட கசிவால் இந்த பெரும் வெடிவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 killed 60 injured in cylinder blast during wedding in rajasthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->