உதம்பூரில் கோர விபத்து: 700 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் உதம்பூரில் 700 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பான் மாவட்டத்தில் உள்ள கூல்-சங்கல்தான் கிராமத்தில் இருந்து காலை 8.30 மணி அளவில் நான்கு பேர் காரில் ஜம்பு நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

அப்பொழுது உதம்பூர் மாவட்டம் செனானி பகுதியில் உள்ள பிரேம் மந்திர் அருகே ஜம்பு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக உதம்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இரண்டு பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இந்த விபத்தில் இறந்தவர்கள் சங்கல்தானைச் சேர்ந்த முப்தி ஜமால் தின், அவரது மனைவி ஹாஜிரா பேகம் மற்றும் அவர்களது மகன் முஃப்தி அப்துல் ஹமீத் மற்றும் சங்கல்டானில் வசிக்கும் குல்சார் மாலிக்கின் மகன் தாடில் என அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 killed as car overturns in 700 feet ditch in Udhampur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->