ஜோத்பூரில் சிலிண்டர் வெடித்து விபத்து - 4 பேர் பலி, 16 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள கிர்த்தி நகர் பகுதியில் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிலிண்டர் வெடித்ததையடுத்து வீடு தீப்பிடித்து அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காயமடைந்த 16 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும், சிலிண்டர்களை ஏற்றி செல்லும் வாகனமும் சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஹு குப்தா, இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு, இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 killed in Cylinder blast accident in Jodhpur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->