பெரும் சோகம்! ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு! 4 பேர் பலி!
4 members of the same family drowned in the river in Thiruvananthapuram
திருவனந்தபுரத்தில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆரிய நாடு பகுதியை சேர்ந்தவர் அனில் குமார். இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு அமல், அகில் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். அனில் குமார் கேரளா காவல்துறை ஐஜி ஹர்ஷிதா அவர்களின் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று விடுமுறை என்பதால் அவர் வீட்டுக்கு அவருடைய சகோதரர் சுனில் குமார் மற்றும் சகோதரி ஸ்ரீபிரியாவின் குடும்பத்தினர் வந்துள்ளனர். மூன்று குடும்பத்தினரும் சேர்ந்து ஒரே வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் விவசாய நிலங்களை பார்ப்பதற்காக மூணாட்டுமுக்கில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள பயிர்களுக்கு உரம் இடும் வேளையில் அனைவரும் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வேலையை முடித்துவிட்டு அனைவரும் அங்குள்ள கரமனா ஆற்றில் குளித்து நீராடி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அனில் குமாரின் சகோதரி ஸ்ரீ பிரியா மகன் ஆனந்த் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் அவரை காப்பாற்றும் முயன்றுள்ளனர்.
அப்போது அணில் குமாரின் மற்றொரு மகன் அகில் சுனில் குமாரின் மகன் ஆனந்த ராமன் ஆகியோர் ஆற்றில் நீந்தி கடந்து வெளியே தப்பித்து உள்ளனர்.
ஆனால் அனில் குமார் அவரது மகன் ஸ்ரீபிரியாவின் மகன் ஆனந்த் சுனில் குமாரின் மகன் அத்வைத் ஆகிய நான்கு பேரும் ஆற்றில் அடுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்த நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரதிப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
4 members of the same family drowned in the river in Thiruvananthapuram