கர்நாடகா: மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து - 4 பேர் பலி - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தின் பன்னிகொப்பா பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த கார் ஒன்று நேற்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், காரில் வந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த நான்கு பேரில் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் மூன்று பேர் ஷண்முகா(28), வெண்ணிலா (25), ரூபாவதி(26) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஓட்டுநர் காரை அதிவேகமாக ஓட்டியதே விபத்திற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 people including 2 women killed as car collides with flyover barrier in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->