வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள் - அசாம் மற்றும் மணிப்பூரில் 48 பேர் பலி..! - Seithipunal
Seithipunal



வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த மாநிலங்களில் உள்ள அனைத்து ஆறுகளும் அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருகின்றன. இதனால் அந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. 

அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய இரு மாநிலங்களில் இதுவரை 48 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அசாமில் 46 பேரும் , மணிப்பூரில் 2 பேரும் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்.

இந்த மாநிலங்களில் தற்போது இரண்டாம் முறையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசாமில் மொத்தம் 29 மாவட்டங்களில் உள்ள 16.25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஒரு நாளில் அசாம் மற்றும் மணிப்பூரில் நூற்றுக் கணக்கான சாலைகள், பாலங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து வரும் ஜூலை 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு மிக கனமழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவமும் அந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் இறங்கியுள்ளது.

இதையடுத்து அசாம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாநில அரசுகள் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் மத்திய அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதி அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

48 Died in Assam And Manipur Flood


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->