இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கார் மோதி விபத்து - 5 பேர் பலி, 4 பேர் காயம் - Seithipunal
Seithipunal


இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கார் மோதியதில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.

இமாச்சல பிரதேசத்தின் பர்வானூ நோக்கி இன்னோவா கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தரம்பூர் அருகே சிம்லா-கல்கா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அதிவேகமாக கார் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்பொழுது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வேலைக்காக சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காயமடைந்தவர்கள் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் குட்டு யாதவ், ராஜா வர்மா, நிஷாத், மோதி லால் யாதவ் மற்றும் சன்னி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் தொழிலாளர்கள் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சோலன் மாவட்டத்தில் உள்ள கசௌலி அருகே உள்ள கர்கல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed 4 injured in car collision in Himachal Pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->