5 மாநில தேர்தல்! காங்கிரசின் முதல் அதிரடி!
5 State election Congress
வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் நிறைவடைகிறது.
இதனையடுத்து இந்த 5 மாநிலத்திற்கும் தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி,
மிசோரமில் நவம்பர் 7,
சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17,
மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17,
ராஜஸ்தானில் நவம்பர் 25
தெலுங்கானாவில் நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தலுக்கு முன்பாக நடக்கும் இந்த 5 மாநில தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், ஆளும் பாஜக, காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.
பாஜக ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
சத்தீஸ்கரில் முதலமைச்சர் பூபேஷ் பாகல் படான் தொகுதியிலும், துணை முதலமைச்சர் சிங் தியோ அம்பிகாபூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேலும், அம்மாநிலத்தில் 30 பேர் கொண்ட முதல் கட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் கோடங்கல் தொகுதியில் போட்டியிடுகிறார். அம்மாநிலத்தில் 55 பேர் கொண்ட முதல்கட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் 144 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ள காங்கிரஸ், முன்னாள் அமைச்சர் கமல்நாத் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவித்துள்ளது.
English Summary
5 State election Congress