இன்று வாக்கு எண்ணிக்கை... 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க போவது யார்?
5 States Vote Counting Today
ஐந்து மாநில வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டபேரவை தேர்தல் நிறைவடைந்தது. உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளில் ஏழுகட்டங்களாக வாக்குபதிவு நடைபெற்றது.
மேலும், பஞ்சாப்பில் 117 தொகுதிகள், உத்தரகாண்டில் 70 தொகுதிகள், மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் பஞ்சாப்பில் 71.95 சதவீதம், உத்தரகாண்டில் 65.37 சதவீதம், கோவாவில் 79.61 சதவீதம், மணிப்பூரில் 88.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்த மாநிலங்களின் தேர்தல் வெற்றி வருகின்ற நாடாளுமன்ற பொது தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தேர்தல் முடிவுகள் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
5 States Vote Counting Today