தானே || கல்யாண் ரெயில் நிலையத்தில் 50 டெட்டனேட்டர்கள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை அருகே இரண்டு பெட்டிகள் கிடந்துள்ளது. இதைப்பார்த்த ரெயில்வே காவல்துறை அதிகாரிகள் அதனை சோதனை செய்ததில், பெட்டியில் 50க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் இருப்பது தெரிய வந்தது. 

உடனே வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டை செயலகச் செய்யும் படைகளும் ரயில்வே நிலையத்திற்கு வரவழைக்க வைக்கப்பட்டது. அவர்கள் பெட்டிகளை தனியாக எடுத்துச் சென்று வெடிகுண்டை செயலிழக்க செய்தனர். பின்னர் ரெயில்வே காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாமல் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட இடத்தை பார்வையிட்டுள்ளனர்.

பொதுவாக தானே மாவட்டத்தில் ஏரிகளில் சட்டவிரோதமாக மீன் பிடிப்பதற்கும், குவாரிகளில் வெடிவைத்து பாறைகளை உடைப்பதற்கும் டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த டெட்டனேட்டர்கள் தண்ணீரின் வழியாக அதிர்ச்சி அலைகளை உருவாக்கி மீன்களை கொல்வதற்கு பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

50 Detonators seized in kalyan railway station in maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->