ஜார்க்கண்ட்: சரக்கு ரெயிலின் 53 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்டில் சரக்கு ரயிலின் 53 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில்வே மண்டலத்தில் உள்ள கோடர்மா மற்றும் மன்பூர் ரயில்வே கோட்டத்திற்கு இடையே உள்ள குர்பா ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் ஒன்று நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது காலை 6.24 மணியளவில் சரக்கு ரயில் விபத்துக்குள்ளாகி 53 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் பல பெட்டிகள் உடைந்து உள்ளே இருந்த நிலக்கரி தரையில் கொட்டியது.

இந்த விபத்தால் அந்த வழியே செல்ல கூடிய மற்றும் அந்த வழியில் வரும் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த விபத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய கிழக்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

53 coaches derailed in Jharkhand freight train accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->