53 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருக்கும் புதுப்பள்ளி தொகுதி! - Seithipunal
Seithipunal


கேரளா முன்னாள் முதல் மந்திரி உயிரிழந்ததை தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி அவர் எம்.எல்.ஏவாக இருந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் உயிரிழந்த உம்மன் சாண்டியின் மகனான சாண்டி உம்மன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

புதுப்பள்ளி தொகுதியில் 53 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக உம்மன் சாண்டி இருந்தார். இந்நிலையில் தற்போது அவரது மகன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். 

இதன் மூலம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 53 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வருகிறது என்பது தெரிகிறது. 

இடைத்தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டசபை கூட்டத் தொடர் இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது இடைத்தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் வெற்றி பெற்ற உம்மன்சாண்டி எம்.எல்.ஏவாக பதவியேற்றார். 

இதற்கு முன்னதாக அவர் இன்று காலை சட்டசபை சபாநாயகர் ஷம்சீரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

53 years Pudupalli constituency Congress party Sandy Ooman win MLA 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->