பீகாரில் செங்கல் சூளையில் பயங்கர வெடி விபத்து - 6 பேர் பலி - Seithipunal
Seithipunal


பீகாரின் ரக்சௌலில் உள்ள செங்கல் சூளையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள ரக்சௌலின் ராம்கர்வா பகுதியில் உள்ள செங்கல் சூலையில் நேற்று மாலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். இருப்பினும் சிலர் இடுப்பாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி மாயமானவர்களை மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த வெடிவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் நிதீஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உயிர் இழப்பை தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 killed in brick kiln explosion in Raxaul Bihar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->