6 - 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி.! - Seithipunal
Seithipunal


இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு DCGI(Drugs Controller General of India) பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் இருக்கின்ற 6 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கி இருக்கின்றது.

எனவே, 6 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் செலுத்துகின்ற பணி விரைவில் துவங்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்சமயம் அவசர கால பயன்பாடாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கின்றது.

தற்போது மீண்டும் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. எனவே, இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி மற்றும் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோர்பெவாக்ஸ் எனம் தடுப்பூசியும் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல12 வயதிற்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துகின்ற பணி துவங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது 6 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 to 12 years old childrens approve covid vaccination


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->