புதுச்சேரி : பேருந்து - ஆட்டோ மோதி விபத்து.! பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் ஆட்டோ-பேருந்து மோதிய விபத்தில் 7 பள்ளி குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

புதுச்சேரி புஸ்ஸி வீதியில் தனியார் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அவழியாக வந்த பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7 பள்ளி குழந்தைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர்.

இதையடுத்து காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையறிந்த குழந்தைகளின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள் 2 முதல் 5 வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், பேருந்து வேகமாக வந்ததாலே விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 school students injured in auto bus collision in puducherry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->