காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 76% இட ஒதுக்கீடு..!! விதான் சபையில் ஒருமனதாக நிறைவேற்றம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டு வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற வருகிறது. அந்த மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டை 76 சதவீதமாக உயர்த்துவதற்கான இரண்டு மசோதாக்கள் விதான் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை 76 சதவீதமாக உயர்த்தும் சட்ட மசோதாக்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவின் படி பட்டியலின மக்களுக்கு 32 சதவீதமும், பழங்குடியின மக்களுக்கு 13 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட மசோதா சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

76 percent reservation law passed in Chhattisgarh assembly


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->