பெரும் சோகம்! வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்! கனமழை,வெள்ளத்தால் 78 பேர் பலி! - Seithipunal
Seithipunal


அசாமில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலத்தில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் 28 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அசாம் மாநிலம் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருவதால் 22 லட்சத்து 74 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை 70 பேர் பலியானதாக செய்தி வெளிய வந்த நிலையில், நேற்று 8 பேர் பலியாகி உள்ளனர் இதனால் பலியின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. காலநிலை மாற்றதால் உலகம் முழுவதும் சராசரியை விட மழையின் அளவும் வெப்பத்தின் அளவும் அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வகையில் ஆசாமின் உள்ள 28 மாவட்டங்கள் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருகிறது. ஆசாமின் முக்கிய பகுதிகளில் மிக கனமழை இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றன. இதனால் பிரம்மபுத்திரா நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விரிக்கப்பட்டுள்ளது. மற்ற நதிகளில் வெள்ளப்பெருக்கால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கு இடையில் வெள்ளப்பாதிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை இன்று நேரில் பார்வையிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

78 people have died due to heavy rains in Assam so far


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->