ஆம் ஆத்மியில் இருந்து நேற்று விலகிய 08 எம்.எல்.ஏ.,க்கள் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்..!
8 MLAs join BJP day after quitting AAP ahead of Delhi elections
டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 8 பேர் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர்.அவர்கள் அனைவரும் இன்று பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். 70 தொகுதிகள் கொண்ட டில்லி சட்டசபை தேர்தல் எதிர்வரும் 05-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அத்துடன், 08-ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
இத்தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி - பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே கடுமையான மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்காத ஆளும் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் எட்டு பேர், நேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதங்களை சட்டசபை சபாநாயகர் நிவாஸ் கோயலுக்கு அனுப்பினர்.
இன்று (01.02.2025) எட்டு எம்.எல்.ஏ.,க்களும் பா.ஜ., தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா மற்றும் பா.ஜ., டில்லி பிரிவு தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்துள்ளனர்.
English Summary
8 MLAs join BJP day after quitting AAP ahead of Delhi elections