800 ரூ. பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவி; தேர்வு எழுத அனுமதி மறுப்பு; அவமானத்தில் தற்கொலை..!
800 Rs Girl commits suicide after school refuses to allow student to write exam for not paying fees
உத்தரபிரதேசத்தில் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ரியா பிரஜாபதி என்ற 17 வயது சிறுமி 09-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளி கட்டணம் ரூ.800 செலுத்தவில்லை. இந்நிலையில், நேற்று பள்ளி ஆண்டு இறுதித் தேர்வு எழுதுவதற்காக மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார்.
ஆனால், பள்ளி நிர்வாகம் ரூ.800 பள்ளி கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், மாணவி, தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால், அந்த மாணவி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், அந்த பள்ளி மேலாளர் சந்தோஷ் குமார், பள்ளி முதல்வர் ராஜ்குமார், ஆசிரியர் தீபக் சரோஜ் உள்ளிட்டோர் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்காமல் அனைவரின் முன்பும் அவமானப்படுத்தியுள்ளனர். அத்துடன், வீட்டுக்கும் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனால், மிகவும் மனமுடைந்த ரியா வீட்டுக்கு சென்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக மாணவியின் தாய் பூனம் தேவி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Note;- தற்கொலை ஒருபோதும் எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், அவற்றை எதிர்கொள்ள உங்களுக்கு உதவி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவுசெய்து பின்வரும் உதவி எண்களை அழைக்கவும்:
தமிழக சுகாதார சேவை உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050
இந்த எண்கள் மூலம், மனநல ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவார்கள்.
English Summary
800 Rs Girl commits suicide after school refuses to allow student to write exam for not paying fees