காவிரி விவகாரத்தில் அக்.12ல் அடுத்த சம்பவம்! வினீத் குப்தா விடுத்த திடீர் அழைப்பு! - Seithipunal
Seithipunal


காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே பூதாகரமாக வெடித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கும் 3 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

அதற்கு எதிராக கர்நாடக மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று தமிழகத்திலும் கர்நாடகா வழங்க வேண்டிய பங்கு நீரை உரிய காலகட்டத்தில் திறந்து விட வேண்டும் என தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். 

இவ்வாறான பரபரப்பான சூழலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 88 வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமானது காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தமிழகத்திற்கு 3000 கன அடி நீர் திறக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக கோரிக்கை வைத்து வரும் நிலையில் வரும் 12ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று கூறுவது இரு மாநில விவசாயிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

88th Cauvery Committee meeting on October 12th


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->