உயிரை காவு வாங்கிய கள்ளசாராயம்.. உத்திரபிரதேசத்தில் நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


கள்ளசாராயம் குடித்து 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஆசம்கரில்  செயல்பட்டு வரும் மதுபானக்கடையில் விற்பனை செய்யப்பட்ட நாட்டுச் சாராயத்தை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வாங்கி அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி சரிந்துள்ளனர்.

உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 9 பேர் உயிரிழந்த நிலையில், மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் கலப்படமான மதுவை விற்பனை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். குற்றவாளிகளை கைது செய்ய அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட காவல்துறையினர் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 killed after consuming counterfeit liquor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->