#அதிர்ச்சி சம்பவம்.! 9 வயது சிறுமியை கொன்று.. 10 துண்டுகளாக உடலை வெட்டிய கொடூரம்...! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் 9 வயது சிறுமியை கொன்று 10 துண்டகளாக உடலை வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரின் மவ்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பழங்குடியின 9 வயது சிறுமி. இவர் கடந்த 29ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில் சிறுமி எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் மவுலி பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு பிளாஸ்டிக் பைக்குள் சிறுமியின் உடல் 10 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய கமலேஷ்(20) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 year old girl killed body cut into 10 pieces in rajasthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->