ஓநாய் தாக்கியதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு! கடந்த 45 நாட்களில் 8 பேர் பலி! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசத்தின் பஹ்ராச் மாவட்டம் மாஷி தாலுகாவில் வனப் பகுதியை ஒட்டி கிராமங்கள் உள்ளதால்  இரவு நேரங்களில் வீடுகளுக்குள் நுழையும் மர்ம விலங்குகள், மனிதர்களை வேட்டையாடுகின்றன. கடந்த 45 நாட்களில் மட்டுமே ஏழு குழந்தைகள் உட்பட எட்டு பேரைக் பலியாக்கி உள்ளது.

இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் கூறியதாவது:- மனிதர்கள் வேட்டையாடும் மர்ம விலங்குகள், சாதாரண ஓநாய்கள் தான் என்று  தெரிவித்துள்ளனர். இதன்படி, தீவிர நடவடிக்கையில் ஈடுபட்ட வனத்துறையினர் 4 ஓநாய்களை பிடித்தனர். ஆனாலும் மனிதர்களை வேட்டையாடுவது நிற்கவில்லை, மர்ம  விலங்குகளின் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது.

இந்நிலையில், இன்று ஓநாய் தாக்கியதில் 3 வயது குழந்தை பலியானது, மூதாட்டி ஒருவர் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து வனப்பகுதியின் சுற்று வட்டாரத்தில் உள்ள 35 கிராமங்களில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் மனிதர்களை வேட்டையாடி வரும் ஓநாய்களின் இருப்பிடத்தை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் .

ஓநாய்களை விரைவில் பிடித்து விடுவோம் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில், சிறு குழந்தைகள் போன்ற வண்ண பொம்மைகளை போன்று ஓநாய்களுக்கு ஆற்றங்கரை ஓரம் பொறி வைத்துள்ளனர்.

இந்த சம்பவங்களை குறித்து மூத்த வனத்துறை அதிகாரி அஜித் கூறியது: ஆற்றங்கரை ஓரம் மற்றும் ஓநாய்கள் பதுங்கும் இடங்கள் மற்றும் புதர்களுக்கு அருகில் குழந்தைகளின் சிறுநீரில் நனைத்த பொம்மைகளை வைத்துளோம், போனமுறை இப்படித்தான் 4 ஓநாய்களை பிடித்தோம்.

மேலும், மீதமுள்ள ஓநாய்கள் தொடர்ந்து தங்கள் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டே உள்ளன. பொதுவாக, இரவில் மனிதர்களை வேட்டையாடிவிட்டு, அதிகாலையில் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்புகின்றன. பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் அவற்றை பொறிகளுக்கு அருகில் உள்ள வெறிச்சோடிய பகுதிகளுக்கு விரட்ட முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 3 year old child died after being attacked by a wolf 8 people died in the last 45 days


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->