டீக்கடையில் திருட சென்ற 13 வயது சிறுவன்...! அடுத்த நொடியே உயிரிழந்த சோகம்...! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் டீக்கடையில் திருடச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டா (13). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு குண்டூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டீ கடையில் திருடுவதற்காக கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்பொழுது கடையில் இருட்டாக இருந்ததால் மின்விளக்கின் சூட்சை போட்டுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென மணிகண்டா மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து நேற்று காலை டீக்கடை உரிமையாளர் வழக்கம் போல் கடையை திறந்துள்ளார். அப்பொழுது மின்சாரம் தாக்கி மணிகண்டா உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மணிகண்டாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A boy who went to steal from a tea shop was electrocuted and died in Andhra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->