சனாதனத்தை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.. உதயநிதி மீது மன்னார்குடி ஜீயர் சாடல் !
Criticism of Sanatana is condemnable Mannargudi Jeeyar slams Udhayanidhi
பொதுவாழ்வில் இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருந்து கொண்டு மற்றொரு மதத்தை விமர்சிப்பதும், குறிப்பாக இந்து மதம் நம்புகின்ற சனாதனத்தை விமர்சிப்பதும் கண்டிக்கத்தக்கது என்று செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் பேட்டியில் கூறியதாவது:-கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவ நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் கிறிஸ்தவனாக இருப்பது பற்றி பெருமைப்படுவதாக தெரிவித்தார். இது முற்றிலும் தவறான போக்கு மற்றும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் பொதுவாழ்வில் இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருந்து கொண்டு மற்றொரு மதத்தை விமர்சிப்பதும், குறிப்பாக இந்து மதம் நம்புகின்ற சனாதனத்தை விமர்சிப்பதும் கண்டிக்கத்தக்கது என்றும் சனாதனத்தை கண்டிப்பதற்காகவே தன்னை கிறிஸ்தவன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிக் கொள்வது போன்று தெரிகிறது என குறிப்பிட்டு பேசினார்.
மேலும் அமைச்சர்கள் எந்த மதமாக இருந்தாலும் அவர்கள் பொதுவானவர்கள் என்பதை உணர்ந்து, தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும்செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Criticism of Sanatana is condemnable Mannargudi Jeeyar slams Udhayanidhi