பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு.... சீமானுக்கு ஆ.ராசா பதிலடி! - Seithipunal
Seithipunal


எதையெதையெல்லாம் திரிக்க வேண்டுமோ அவ்வளவும் திரித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று ஆ ராசா  தெரிவித்தார்.

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண் என்றும்  இருவரின் சிந்தனையும் ஒன்றா? அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர் என்றும்  பெரியார் தனக்கு தோன்றுவதை எல்லாம் பேசுபவர் என சீமான் பேசினார்.

தனது பெரும் செல்வத்தை நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்காக விற்றவர் வ.உ.சி. என்றும் அவர் கடைசி காலத்தில் வறுமையில் தள்ளப்பட்டார் என்றும்  இவர் பேராளியா, பெரியார் போராளியா? என கேள்வி எழுப்பியுள்ள சீமான் சமூகநீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கிறதா அல்லது இட ஒதுக்கீட்டிற்கும் ஆனைமுத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா?  என்றும் போராடி பெற்றுக்கொடுத்தது ஆனைமுத்தா, பெரியாரா?" என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மறைமுகமாக விளக்கம் அளித்துள்ளார்.திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டி பேசிய ஆ.ராசா, "எனக்கிருக்கும் ஒரே தலைவர் அம்பேத்கர் என்று பெரியார் சொன்னார் என்றும் தமிழ்நாட்டு மக்கள் என்னிடம் வரவேண்டாம் எனக்கும் சேர்த்து அங்கு பெரியார் இருக்கிறார் என்று அம்பேத்கர் சொன்னார் என ராசா கூறினார்.

மேலும் வ.உ.சிக்கும் பெரியாருக்கும் பிரச்சனை இல்லை என்றும்  பெரியார் படத்தைப் பார்த்தால் வ.உ.சி. கும்பிடுவார் என்றும் பெரியாருக்கும் பிரச்சனை இல்லை என்றும்  பெரியாருடன்தான் அவர் வாழ்ந்தார் என்றும் எதையெதையெல்லாம் திரிக்க வேண்டுமோ அவ்வளவும் திரித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று அப்போது ஆ ராசா  தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Controversy over Periyar A Raja hits back at Seeman


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->