காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி இல்லை என சொல்லும் தொழிலதிபர்! - Seithipunal
Seithipunal


மன்மோகன் சிங் முடிவுகள் எடுப்பதில் தாமதமானவர்!

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிலையத்தில் இளம் தொழில் முனைவோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி பேசினார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து நின்று விட்டது எனக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்  "மன்மோகத்தின் தனிப்பட்ட முறையில் அசாதாரண திறன் படைத்தவர். ஆனால் அவர் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் வளர்ச்சி தடைப்பட்டது. முடிவுகள் எடுப்பதில் தாமதம் நிலவியது. இப்போது இந்தியா உலக அளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார வல்லரசாக இருக்கிறது.

உங்களைப் போன்ற இளைஞர்கள் தான் இந்தியாவை சீனாவுக்கு நிகராக போட்டியாளராக உருவெடுக்க செய்ய முடியும். 2008 முதல் 2012 வரை நான் லண்டன் ஹெச்எஸ்பிசி வாரியத்தின் உறுப்பினராக இருந்தேன். போர் மீட்டிங் நடைபெறும் போது இரண்டு மூன்று முறை உலக பொருளாதார நிபுணர்கள் சீனாவை பாராட்டி கேட்டுள்ளேன். அப்போது ஒரு தொழிலதிபதியிடம் இந்தியாவின் பொருளாதாரத்தை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. "நிச்சயம் இந்தியாவின் பெயரும் இது அரங்கில் பேசப்படும் நாள் வரும்" என்றார். ஆனால் அதன் பின்னர் இந்தியாவுக்கு என்னவானது என்று தெரியவில்லை.

ஆனால் இன்று இந்தியாவை இழிவாக பார்த்த மேற்கு நாட்டினர், இன்று மரியாதைடன் பார்க்கிறார்கள். 1991 மன்மோகன் சிங் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த திட்டங்களும், பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களும் இந்தியாவை பொருளாதார ரீதியாக மேம்படுத்த வழிவகை செய்துள்ளது" என்று பேசியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A businessman who says that there is no development in Congress rule


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->