மேற்கு வங்கத்தில் வாக்கு பெட்டியுடன் தலை தெரிக்க ஓடிய நபரின் வீடியோ வைரல்.!! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 5.67 கோடி வாக்காளர்கள் இன்று நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அம்மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் வன்முறை மற்றும் கலவரங்கள் அரங்கேறி வருகிறது.

இதன் காரணமாக 65,000 துணை ராணுவப் படையினர் மற்றும் மாநில காவல்துறை சார்பில் 70,000 காவலர்களும் பாதுகாப்புடன் இன்று காலை 7 மணி முதல் மொத்தம் 63,229 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், 9,730 பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் 928 மாவட்ட உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

தேர்தல் தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் கலவரம் வெடித்துள்ளது. பல வாக்குச்சாவடி மையங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சி தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வாக்கு பெட்டியை ஒரு நபர் தூக்கிக்கொண்டு தலை தெரிக்க ஓடும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்குவங்க ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி காங்கிரஸ் கட்சி மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளது. பல மாவட்டங்களில் கலவரம் வெடித்துள்ளதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man ran away with ballot box in West Bengal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->