பஞ்சாப்பில் போதைப்பொருள், ஆளில்லா விமானம் பறிமுதல் - பாதுகாப்பு படையினர் அதிரடி.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் ஊடுருவல் மற்றும் கடத்தல் முயற்சிகளை தடுக்கும் விதமாக, எல்லை பாதுகாப்பு படை மற்றும் பஞ்சாப் போலீசார் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பஞ்சாபி மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள உத்தர் தரிவால் கிராமத்தில் வயல்வெளி ஒன்றில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பஞ்சாப் போலீசாருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் முயற்சிகளின் ஒரு பகுதியாக மற்றொரு ஆளில்லா விமானம் மற்றும் ஹெராயின் போதை பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதே மாவட்டத்தில் பச்சிவிந்த் கிராமத்தில் வயல்வெளியில் இருந்து 460 கிராம் எடை கொண்ட ஹெராயினையும், தார்ன் தரன் மாவட்டத்தில் கெம்கரண் கிராமத்தில் வயல்வெளி ஒன்றில் இருந்து டி.ஜே.ஐ. மேவிக் 3 கிளாசிக் ரக ஆளில்லா விமானம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து எல்லை பாதுகாப்பு படை தெரிவித்ததாவது:- "எல்லைப் பகுதியில் சட்டவிரோத ஆளில்லா விமானம் ஊடுருவல் மற்றும் கடத்தல் முயற்சியானது முறியடிக்கப்பட்டது என்றுத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drugs and drones found in punjab


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->