கோவா கடற்கரை அருகே மிக் 29கே போர் விமானம் கடலில் விழுந்து விபத்து.! - Seithipunal
Seithipunal


கோவா கடற்கரை அருகே மிக் 29கே போர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

கோவா கடற்கரை அருகே இந்திய கப்பல்படையின் மிக் 29கே ரக போர் விமானம் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்பொழுது பயிற்சியை முடித்துவிட்டு தளத்திற்குத் திரும்பும்போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதைத்தொடர்ந்து, இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து, உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர், விபத்தில் சிக்கிய விமானியை பாதுகாப்பாக மீட்டனர். 

மேலும் விமானியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள விசாரணை குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A MiG 29K fighter jet crashed into the sea near the coast of Goa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->