நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி விவாதிக்க வேண்டும்: கபில் சிபல் வலியுறுத்தல்..!
A special session of Parliament should be convened to discuss the Pahalgam attack Kapil Sibal insists
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து, விவாதிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில்சிபல் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'இந்தியா மீது அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு தொடர் ஒன்றை நடத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றுமாறு பிரதமரை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அத்துடன், இந்த நாடு உங்களுடன் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் உங்களுடன் இருக்கின்றன. ஏனெனில் இது நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய குழு ஒன்றை முக்கியமான நாடுகளுக்கு அனுப்பி பாகிஸ்தான் மீது அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
A special session of Parliament should be convened to discuss the Pahalgam attack Kapil Sibal insists