ஆய்வறிக்கையின்படி ரிலையன்ஸ் ஜியோ, உலக முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது...!
Reliance Jio included list worlds leading companies
'முகேஷ் அம்பானி',ஆசியாவிலேயே பெரும் பணக்காரராக இருப்பவர். இவருக்கு சொந்தமான 'ரிலையன்ஸ்' நிறுவனம் தொலைத்தொடர்பு, எண்ணைய் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில் துறைகளில் முன்னணியில் இருந்து வருகிறது.

இந்நிலையில், முகேஷ் அம்பானியின் 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தொழில் நிறுவனம்' உலகின் முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் தற்போது இடம் பிடித்துள்ளது.
இதில், பிரபல புளூம்பெர்க் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கைப்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் 21-வது இடத்தை பிடித்துள்ளது.
அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் ரூ.10,73,000 கோடி (118 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என கணக்கீடப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலகின் பெரு நிறுவனங்களான மைக்ரோசாப்ட், ஆல்பபெட் (கூகுளின் தாய் நிறுவனம்), சவுதி அராம்கோ உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் பட்டியலில் 'ரிலையன்ஸ் நிறுவனம்' இணைந்துள்ளது.
English Summary
Reliance Jio included list worlds leading companies